தொழிலதிபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ - சோஷியல் மீடியாவில் பரவுவது உண்மையா?
பிரபல தொழிலதிபரிடம், சென்னை போலீசார் 25 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்பதாக, சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரசன்ன சங்கருக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தையை இருவரும் பராமரித்து வரும் நிலையில், நீதிமன்றம் குறித்த தேதிக்குள் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்காததால் பிரசன்னாவின் மனைவி, பிரசன்னா மீதும் அவரது நண்பர் மீதும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் பிரசன்னாவின் நண்பரை கைது செய்த போலீசார், அவரை விடுவிக்க ரூபாய் 25 லட்சம் தர வேண்டும் என தன்னை மிரட்டுவதாக பிரசன்னா குற்றம் சாட்டியுள்ளார்.