கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 38 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 44 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 20 தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஒரே நாளில் 38 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 44 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.