நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக ஆடல் பாடல் நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. உப்புகுளம் கிராமத்தில் கோயில் விழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி களைகட்டியது.
ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்த நிலையில், மேடை அருகே சென்று ஆட்டம் போட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய விழாக் குழுவினர், ரசிகர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நிகழ்ச்சியை மேற்கொண்டு நடத்த முடியும் என தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குமாரபாளையம் போலீசார், மேடையில் ஏறி எச்சரித்ததுடன் மேடை அருகில் நின்றிருந்த இளைஞர்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.