வீட்டு முன் கணவன், மனைவிமீது கொடூர தாக்குதல்.. அலறிய குழந்தை அதிர்ச்சி வீடியோ
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும், நாமக்கல் திமுக எம்.எல்.ஏ ராமலிங்கத்தின் உறவினரான அருண்குமார் என்பவருக்கும் இடையே வழித்தட தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அருண்குமார் தனது பாதையில் உள்ள புற்களை வெட்டி அதன் குப்பைகளை ரவிக்குமார் வீட்டின் முன்பு கொட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்கச்சென்ற ரவிக்குமாரை அருண்குமார் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சாலா ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.