முக்கிய சாலையில் GAS ஏற்றி வந்த லாரியில் இருந்து திடீர் கசிவு.. 1 மணிநேர திக் திக்..
தனியார் கேஸ் நிறுவனத்திற்கு கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டதை அறிந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்ததோடு அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தையும் வேறு பாதைக்கு திருப்பி விட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் டேங்கர் லாரியில் இருந்த கேஸ் வெளியேற்றப்பட்டு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.