கேஸ் டேங்கர் விபத்து.. “லைட் போடாதீங்க , கேஸ் அடுப்புகளை பற்ற வைக்காதீங்க “ - கோவை மக்களுக்கு எச்சரிக்கை
கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்சார விளக்குகளை அணைக்குமாறும் சமையல் கேஸ் அடுப்புகளை பற்ற வைக்க வேண்டாம் என்றும் மாநகராட்சி சார்பில் 56 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர் .
இந்த விபத்தின் காரணமாக எல்பிஜி சிலிண்டர் லாரியில் இருந்து கேஸ் வெளியேறா வண்ணம் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து வருகின்றனர் இந்நிலையில் கேஸ் லீக் ஆகாமல் மற்ற பகுதிகளுக்கு பரவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கோவை மாநகராட்சி சார்பில் 56 பணியாளர்கள் இப்பகுதியை சுற்றியுள்ள வீடுகள் கடைகளுக்கு சென்று மின்சார விளக்குகளையும் சமையல் கேஸ் அடுப்புகளையும் அணைத்து வைக்குமாறு வீடு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர்....