பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பில் ஈடுபட்டது. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது. கேப்டன் டெம்பா பவுமா சதம் விளாசி அசத்தினார். தொடக்க வீரர் ரிக்கல்டன் சதம் அடித்து 176 ரன்களுடன் களத்தில் உள்ளார். டேவிட் பெடிங்கம் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ள நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மேலும் ரன் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.