``உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்'' - கம்பீர் அறிவுரை | Gautham Gambhir | Indian Cricketer
உள்ளூர் போட்டிகளில் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என்றே தான் விரும்புவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். வாய்ப்பு இருக்கும்போது வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும், உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தராவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் நினைக்கும் வீரர்கள் கிடைக்க மாட்டார்கள் என்றும் கம்பீர் கூறியுள்ளார். இங்கிலாந்து தொடருக்கு இடைப்பட்ட 5 மாதங்களில் அணியில் மாற்றங்கள் நிகழலாம் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.