சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடர்பாக பிசிசிஐ இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து விட்டதால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான அணித் தேர்வு, தற்போதைய வீரர்கள் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிசிசிஐ அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. அடுத்த உலகக்கோப்பை தொடர் 2027ம் ஆண்டு நடைபெறும் என்பதால் ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா உள்ளிட்டோருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடைசி ஐசிசி தொடராக பார்க்கப்படுகிறது.