மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
- சட்டப்பேரவையில் யார் அந்த சார்? என்ற பதாகைகளை ஏந்தி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு..
- சபாநாயகர் உத்தரவை அடுத்து, கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினரை கூண்டோடு வெளியேற்றம்..
- இன்று சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்டது ஆளுநர் உரை அல்ல, சபாநாயகர் உரை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..
- ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் ஏதுமின்றி காற்றடித்த பலூன் போல் உள்ளதாகவும் விமர்சனம்....
- சட்டப்பேரவையின் இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவதுதான் மரபு என அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம்..
- ஆளுநரின் செயல்பாடு மூலம் அவரது உள்நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது என்றும் கருத்து....
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 14 ஆயிரத்து 104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..
- சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு....
- தமிழக சட்டப்பேரவையில் அரசியலமைப்பு சட்டம், தேசிய கீதம் மீண்டும் அவமதிப்பு.
- முதலில் தேசிய கீதம் பாடாமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக, ஆளுநர் மாளிகை தகவல்.