பிரிஸ்பேன் ஓபன் - சபலென்கா சாம்பியன்...

x

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் பெலாரஸைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர்ப் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை போலினா குடெர்மெட்டோவா (Polina Kudermetova) உடன் சபலென்கா பலப்பரீட்சை நடத்தினார். போட்டியின் முதல் செட்டை போலினா 6க்கு 4 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து அடுத்தடுத்த செட்களில் கம்-பேக் (comeback) கொடுத்த சபலென்கா, 6க்கு 3, 6க்கு 2 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்களைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்