- இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. வெல்லிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 44வது ஓவரில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்ரி (matt henry) 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா - வில் யங் இணை சிறப்பான தொடக்கம் தந்தது. ரச்சின் ரவீந்திரா 45 ரன்களில் கேட்ச் ஆனார். வில் யங் அரைசதம் அடித்தார். 27வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது. வில் யங் 90 ரன்களுடனும் மார்க் சாப்மேன் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர்.