கடைசி போட்டியில் விலகல்.. கேப்டனான பும்ரா.. நிரந்தர ஓய்வா? - கடுங்கோபத்தில் ரோஹித் சர்மா
சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்க வில்லை. அதற்கு முன்பு அவர் தலைமையில் களமிறங்கிய 3 போட்டிகளில் 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவுமே கண்டிருந்தது. ரோகித் சர்மா சரியாக விளையாடாததே தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கொந்தளித்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டதால், பிசிசிஐ-யும் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த சூழலில், அவர் கடைசி போட்டியில் களமிறங்காததால் பொறுப்பு கேப்டனான ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தி வருகிறார். இதனால் ரோகித் சர்மா ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்தநிலையில், இதுசம்பந்தமாக விளக்கம் அளித்துள்ள ரோகித் சர்மா, ஓய்வு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், பார்ம்-அவுட்டால் கடைசி போட்டியில் இருந்து தானே விலகிவிட்டதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.