ஆஸியில் அவமதிக்கப்பட்டாரா கவாஸ்கர்? - அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்.. பின்னணி என்ன?
பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கியபோது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கரை அழைக்காதது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடரின் பெயரே கவாஸ்கரை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றிக்கோப்பையை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர் மட்டும் தான் கம்மின்ஸிடம் வழங்கினார். தன்னை அழைத்து இருந்தால் நண்பர் ஆலன் பார்டருடன் இணைந்து கோப்பையை வழங்கி இருப்பேன் என்றும், இந்தியர் என்பதால் தான் அழைக்கப்படவில்லையோ என்றும் கூறி கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.