ஐஸ் ஹாக்கி போட்டி - மைதானத்தில் டெடி பியர் மழை

x

அமெரிக்காவில் ஐஸ் ஹாக்கி மைதானத்தில் டெடி பியர் பொம்மைகளை வீசி, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஹெர்ஷே நகரில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில், ஹெர்ஷே பியர்ஸ் அணிக்காக மைக் ஸ்கர்போசா (Mike Sgarbossa) என்ற வீரர் முதல் கோலை அடித்தார். இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் தங்களிடமிருந்த டெடி பியர் பொம்மைகளை மைதானத்திற்குள் தூக்கி வீசினர். இதனால் மைதானம் முழுவதும், டெடி பியர் பொம்மைகளாக காட்சியளித்தது.


Next Story

மேலும் செய்திகள்