இந்திய அணிக்கு துணை கேப்டன் பதவியை ஏற்கும் பவுலர்.. யார் தெரியுமா? | BCCI
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணிக்கு துணை கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. தொடருக்கான உத்தேச அணியை வருகிற 12ம் தேதிக்குள் பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிப்ரவரி 13ம் தேதி வரை அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும், ரோகித் சர்மா கேப்டனாகவும் பும்ரா துணை கேப்டனாகவும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செயல்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.