டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை தென் ஆப்பிரிக்கா ஒயிட்வாஷ் செய்துள்ளது. கேப்டவுனில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 615 ரன்கள் குவித்தது. ரிக்கல்டன் இரட்டைச் சதம் விளாசினார். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ-ஆன் ஆனது. தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 478 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷான் மசூட் சதம் அடித்தார். பின்னர் 58 ரன்கள் என்ற எளிய இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய தென் ஆப்பிரிக்கா,, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முழுமையாக தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.