கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..? - மவுனம் கலைத்த ரோகித் சர்மா

Update: 2025-01-04 13:40 GMT

தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார். சிட்னி டெஸ்ட்டில் இருந்து விலகியது தொடர்பாக பேசிய ரோகித் சர்மா, பேப்பர், பேனா வைத்திருப்போர் தன்னைப் பற்றி சொல்வதைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும், நல்ல ஃபார்மில் இல்லாததால் சிட்னி டெஸ்ட்டில் இருந்து விலகினேன் என்றும் கூறினார். நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடும் தனக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும் என்றும், மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப கடினமாக பயிற்சி மேற்கொள்வேன் என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்