பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது இந்தியா

Update: 2025-01-05 13:41 GMT

சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தன. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் ஆடிய இந்தியா, 3ம் நாள் ஆட்டத்தில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய பவுலர் ஸ்காட் போலண்ட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 162 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய வீரர்கள், நிதானமாக விளையாடினர். தசைப்பிடிப்பு காரணமாக கேப்டன் பும்ரா பந்துவீச முடியாமல் போனதால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இதனால் 27வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பி.ஜி.டி தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வென்ற கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்