பெண்ணை விடாமல் துரத்திய எமன்.. 2ம் முறை லிப்ட் உருவத்தில் வந்து கொன்ற பயங்கரம்
தெலுங்கானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில்
லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரை சேர்ந்த சரோஜா
இதய அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை முடிந்து, அவரை சாதாரண அறைக்கு மாற்றுவதற்காக லிப்டில் அழைத்துச் சென்ற போது லிப்டில் கோளாறு ஏற்பட்டு திடீரென கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 ஊழியர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.