புதுச்சேரி, லப்போர்த் வீதியில் உள்ள விடுதி கட்டடத்தை வாடகைக்கு எடுத்து நடத்திவரும் ஸ்டீபன்ராஜ் என்பவருக்கும் விடுதியின் இயக்குநராக இருக்கும் அருள்தாஸ் என்பவருக்கும் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விடுதிக்குள் புகுந்த அருள்தாஸ் ஸ்டீபன்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அருள்தாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.