இமாச்சலபிரதேசம் லாஹால், ஸ்பிட்டியில் (Lahaul and Spiti), உலகிலேயே மிக உயரமான பனி மாரத்தான் நடைபெற்றது. சிஸ்சு மலை பகுதியில் சுமார் 10 ஆயிரத்து 500 அடி உயரத்தில், இந்த போட்டி நடைபெற்றது. அழகிய பனி மூடிய மலைகளுக்கு நடுவில், பனி உறைந்து கிடந்த தரையில் நடைபெற்ற மாரத்தானில், நாடு முழுவதும் இருந்து 250 வீரர்கள் பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.