வன்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த 23 வயது இளம்பெண் படுகாயமடைந்தார். கடந்த மார்ச்.22-ல் செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்ட புறநகர் மின்சார ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் அந்த இளம்பெண் பயணித்துள்ளார். அப்போது, பெண்கள் பெட்டியில் ஏறிய 25 வயதுடைய நபர் ஒருவர் பெட்டியில் தனியாக இருந்த பெண்ணை வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றுள்ளார். அதிலிருந்து தப்பிப்பதற்காக அந்த பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தபோது படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story