``ஒரு மைக்ரோ நொடியில் 3 உயிர்கள்'' - இதயத்துடிப்பை நிறுத்தவிடும் பகீர் வீடியோ
இடுக்கியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கேரள மாநிலம் இடுக்கி அருகே அடிமாலி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் வாகனத்தின் மீது அமர்ந்திருந்த இளைஞர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.