திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம்
விமர்சையாக நடைபெற்றது. கருவறை முதல் துணை சன்னதிகள், பிரசாத தயாரிப்பு கூடங்கள், கொடி மரம், பலிபீடம், தங்க கோபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. பின் கோவில் முழுவதும் நறுமண கலவை தெளிக்கப்பட்டு ஏழுமலையானுக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டு தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.