மூன்று பிள்ளைகள் கொலை... மனைவி உயிர் ஊசல்...

x

மூன்று பிள்ளைகளை துப்பாக்கியால சுட்டுக்கொன்னுட்டு, மனைவியையும் தோட்டாவுக்கு இரையாக்கி இருக்காரு இங்க ஒரு அரசியல் பிரபலம்... 2வது மனைவியின் கள்ளக்காதலால் கணவன் ஆடிய கோரதாண்டவம் இது...

பதறி அடித்து எழுந்த அக்கம் பக்கத்தினர் தோட்டா தெறித்த வீட்டிற்குள் சென்று பார்த்திருக்கிறார்கள்...

அவர்கள் கண்ட காட்சி ஈரக்குலையை நடுங்க வைத்திருக்கிறது...

மனைவி, 3 பிள்ளைகள் என குடும்பத்தையே தோட்டாவுக்கு இரையாக்கிவிட்டு கையிலே GUN-னோடு அமர்ந்திருந்தார் அந்த கணவன்.

உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது... சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சம்பவ இடத்திலேயே இரண்டு பிள்ளைகள் இறந்துவிட மற்றொரு ஆண் பிள்ளை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போயிருக்கிறது. மனைவி மட்டும் உயிருக்கு போராடி வருகிறார்.

உடனே போலீசார், இந்த கோரத்தை செய்த கணவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் நடந்த கொடூரக் கொலைக்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.

கொலையாளியின் பெயர் யோகேஷ் ரோஹில்லா.... 44 வயதான இவர் சகாதேடா கிராமத்தை சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். யோகேஷுக்கு நேஹா என்பவருடன் திருமணமாகி 12 வயதான ஷரத்தா, 7 வயதான சிவான்ஷ், 5 வயதான தேவன்ஷ் என மொத்த மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர்.

5 பேரும் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் உறங்கச்சென்றுள்ளனர். அப்போது கணவன் மனைவிக்கிடையே விடிய விடிய சண்டை நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அது தகராறாக மாற, யோகேஷ் லைசன்ஸோடு வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குடும்பத்தையே குறிவைத்து சுட்டிருக்கிறார்.

பாவம் யோகேஷின் ஆத்திரத்தில் ஒன்றும் அறியாத 3 பிள்ளைகளும் பரிதாபமாக பலியாகி இருக்கின்றன. இந்த கோரத்திற்கு காரணமாக சொல்லப்படுவது யோகேஷ் மனைவியின் கள்ளக்காதல்....

யோகேஷுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணமாகி ஒரே வருடத்தில் இறந்து போயிருக்கிறார். அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நேஹா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. முத்தாக மூன்று பிள்ளைகள் பிறந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. சமீப நாட்களாக நேஹாவின் நடத்தையில் மாற்றம் இருந்திருக்கிறது.

அதனை ஆராய்ந்த போது தான், நேஹா வேறு ஒரு நபருடன் பேசி பழகி கள்ளக்காதல் வளர்த்து வருவது தெரிந்திருக்கிறது. இதனால் கொதித்து போன யோகேஷ், மனைவியின் கள்ளக்காதலை கண்டித்துள்ளார். மேலும் தகாத உறவை முறித்துக்கொள்ள எச்சரித்துள்ளார்.

ஆனால் நேஹா அதை கேட்பதாயில்லை. களள்ளக்காதலை தொடர்ந்திருக்கிறார். இந்த உண்மை தெரிந்தும், தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற விரக்தி அவரை சூழ்ந்திருக்கிறது. அது யோகேஷின் மனதில் கொலை வெறியை தூண்டி இருக்கிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கள்ளக்காதல் சண்டை வெடிக்க, யோகேஷ் சற்றும் யோசிக்காமல் தற்காப்புக்கு வாங்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குடும்பத்தையே நிர்மூலமாக்கியது தெரியவந்திருக்கறது.

மனைவி மீதிருந்த அதீத ஆத்திரத்தில் முதலில் படுக்கையில் கிடந்த மூன்று பிள்ளைகளையும் சரமாரியாக சுட்ட யோகேஷ், மனைவி மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். ஆனால் 3 பிள்ளைகளும் இறந்துவிட நேஹா மட்டும் உயிருக்கு போராடி வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், பாஜக பிரமுகர் யோகேஷ் ரோஹில்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

தாயின் கள்ளக்காதல், தந்தையின் கோவம், இவை இரண்டும் மூன்று பிள்ளைகளின் உயிரை குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்