சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் | காங். எம்.எல்.ஏ.க்கள்Vs போலீசார் | அதிர்ந்த சட்டசபை வளாகம்
ஒடிசாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவை வளாகத்திற்குள் போலீஸ் தடுப்புகளை தாண்டி நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைக்கக்கோரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிய நிலையில், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக,12 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில், சட்டசபை வளாகத்திற்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நுழைய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.