நாக்பூர் வன்முறை சம்பவம் - தேவேந்திர பட்னாவிஸ் எடுத்த முக்கிய முடிவு

Update: 2025-03-23 02:15 GMT

மகராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் வன்முறை சம்பவத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி, ஒளரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தில், இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, நாக்பூரின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த விவகாரத்தில், 105 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்,.சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது நகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை நீக்குவது குறித்து உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்