நின்று கொண்டிருந்த பைக் மீது மோதிய பேருந்து..பறந்து விழுந்த நபர் - அதிர்ச்சி CCTV
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சாலையின் நடுவே நின்றிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். சாலையை கடப்பதற்கு இண்டிகேட்டர் போட்டிருந்த நிலையில் அரசு பேருந்து விபத்தை ஏற்படுத்தியதாக வாகன ஓட்டி புகார் தெரிவித்துள்ளார். தற்போது விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது