பிரபல இந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா 59-வது ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அளவில் இலக்கியத்துறையில் மிக உயரிய விருதான ஞானபீட விருதை சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து பெறும் முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என இலக்கியத் துறையில் பல்வேறு பங்களிப்புகளை அளித்துள்ள வினோத் குமார் சுக்லாவுக்கு, விருதுடன் ரூபாய்.11 லட்சம் ஊக்கத்தொகையும், சரஸ்வதி உருவத்திலான வெண்கலச்சிலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படவுள்ளது.