இளம் பெண்ணை சுற்றி வளைத்து கடித்துக் குதறிய தெரு நாய்கள்... நெஞ்சை உலுக்கும் பயங்கர சிசிடிவி

Update: 2025-03-25 01:55 GMT

உத்தரகாண்ட் மாநிலம், ஹரிதுவார் அருகே நடந்து சென்ற பெண்ணை தெரு நாய்கள் சுற்றிவளைத்து கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிவாலாப்பூர் jwalapur பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணை தெரு நாய்கள் சூழ்ந்துகொண்டதால் அவர் பயத்தில் தடுமாறி நின்றார். சுதாரிப்பதற்குள் அவரை சுற்றிவளைத்த ஐந்து நாய்கள் அந்த பெண்ணை கடுமையாக கடித்துக்குதறின. வலியால் அந்த பெண் துடிப்பதை கண்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்