ரோகிணி தியேட்டர் நரிக்குறவர்கள் விவகாரம் - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2023-06-04 12:17 GMT

சென்னை ரோகிணி திரையரங்கில் திரைப்படத்தை பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில், ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை ரோகிணி திரையரங்கில் கடந்த மார்ச் 30ம் தேதி திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், திரையரங்கு ஊழியர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர்களின் சாதிச்சான்றிதழ் பெற்று பொன்னேரி வட்டாட்சியரிடம் விளக்கம் கோரியதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கி நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் என்ற பிரிவின் கீழ், திரையரங்க ஊழியர் குமரேசனை கைது செய்த போலீசார், சொந்த பிணையில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்