சென்னையில் இருவேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கணவரிடம் விவாகரத்து பெற்று தன்னுடன் பழகிய பெண்ணை தாக்கி செல்போனை பறித்த முத்தையா தினேஷ்குமார் என்பவர்
கைது செய்யப்பட்டார். இதேபோன்று ஏழு கிணறு பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரின் மனைவிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த டிங்கு என்ற சுசில் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.