ஏமாற்றுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நுகர்வோர் தின மாநாட்டில்
நடிகை தேவயானி அறிவுரை வழங்கினார். தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய
அவர்,மேக்கப் போட்ட பிறகு அதை கலைப்பதற்கு தான் இன்று வரை தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், எந்த ஒரு விளம்பரத்தை பார்த்தும், தான் தவறான பொருட்களை வாங்கி ஏமாறுவது கிடையாது என்றும் கூறினார்.