தந்தை கொடுத்த அன்பு பரிசு.. கண்முன்னே கருகிய சோகம் - கதறி துடித்த கல்லூரி மாணவன்
சங்கரன்கோவில் அருகே தந்தை ஆசையாக வாங்கிக்கொடுத்த வாகனம் திடீரென தீ பற்றி எரிந்ததால் கல்லூரி மாணவர் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த புளியங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சதீஷ்குமார் என்ற சட்டக் கல்லூரி மாணவரின் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போது, தீ கட்டுக்குள் வராததால் வாகனத்தின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. தனது கண்முன்னே வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் விரக்தியடைந்த மாணவர் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.