"எதுக்கு மேல கை வச்ச..." - மதுபோதையில் போலீசிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் | TN Police
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மதுபோதையில் சிறப்பு காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சேர்வராயன் கோவில் பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிலம்பரசன், பிரவீன்குமார் இருவரையும் எச்சரித்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது...