தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக லிப்ட் பழுதடைந்து செயல்படாததால் நோயாளிகளை ஸ்ட்ரெச்சர்களில் தள்ளி செல்லும் அவல நிலை நிலவி வருகிறது. 5 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டும், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக லிப்ட் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதன் காரணமாக நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து தள்ளி செல்வதும், மருத்துவமனைக்கு வரும் மூதாட்டிகள் சுவரை பிடித்தபடி நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக
லிப்ட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.