"என் கணவருக்கு நியாயம் வேண்டும்" - எஸ்.பி., அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் மனைவி திடீர் தர்ணா

Update: 2023-01-01 11:54 GMT

விழுப்புரத்தில், தற்கொலை வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பழிவாங்கும் நடவடிக்கை என குற்றஞ்சாட்டி அவரது மனைவி எஸ்பி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

கஞ்சனூர் காவல் நிலையத்தில், ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெய்சங்கர் என்பவர், தற்கொலை வழக்கு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டிய அவரது மனைவியும் வழக்கறிஞமான சரஸ்வதி, நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சரஸ்வதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தனது கணவருக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றார். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், சரஸ்வதியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயற்சி செய்த போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்