கனடாவை சுற்றிப் பார்க்க கிளம்பலாம் வாங்க...

x

நாட்டோட பேரு மட்டும் தாங்க குட்டியா வச்சுருக்காங்க.. ஆனா உலகத்துலயயே இது தான் ரெண்டாவது பெரிய நாடு…

கனிம வளங்கள், இயற்கை வளங்கள்னு ஏகப்பட்ட வளங்கள் இந்த கனடா நாட்டுலயே இருக்குறதுனால.. எந்த ஒரு விசயத்துக்கும் மற்ற நாடுகள் கிட்ட கை ஏந்தாதா நாடா இருக்கு கனடா…

இந்த நாட்டோட பிரதமர் கூட நமக்கு ரொம்ப பழக்கம் தான்… அட ஆமாங்க ஒவ்வொரு பொங்களுக்கும் மறக்காம டை பொங்கள் நல் வாழ்ட்டுக்கள்னு அவரோட ஸ்டைல்ல நமக்கு விஸ்லாம் பண்ணிருக்காருனா பாருங்க…


எங்க பாத்தாளும் குளிரும், பனி பொலிவா இருக்குறதுனால… இங்க இது மட்டும் தான் எண்டர்டெயின்மெண்ட்னு நெனச்சுடாதீங்க..

தம்மாதுண்டு மகாவ் நாட்டுலயே ஏகப்பட்ட எண்டர்டெயின்மெண்ட்ட அள்ளி குடுக்குறாங்க… இவளோ பெரிய நாட்டுல எண்டர் டெயின்மெண்ட்கு குறை வச்சுடுவாங்களா என்ன ? முக்கியமா கனடாவ சுத்தி பாக்க வரவங்க வெறும் சம்மரை சமாளிக்க மட்டும் வரலைங்க… அதை தாண்டி ஏகப்பட்ட டூரிஸ்ட் ஸ்பாட்ட அட்வென்சர் பண்றதுக்காகவே படையெடுத்து வராங்க…

சரி ரொம்ப ஊர் பெருமையா பேசிட்டு இருந்தா நல்லாருக்காது… அதுனால பிளைட்ட ஊருக்குள்ள இறக்கி அலப்பறை குடுக்க ஆரம்பிச்சுடலாம் வாங்க…


திருமலை படத்துல…. ஆந்திரா வரை வந்துட்டோம் நான் போய் சிரஞ்சீவிய பாத்துட்டு வந்துட்றேன்னு விஜய் சொல்லுற மாதிரி… கனடாக்கு வந்த நம்ம முதல்ல பாக்க போற இடம்… Niagara Falls…

யப்பா… அருவி ஊத்துற சத்ததுல காதுங்குற உருப்பே நம்ம கிட்ட இல்லாதது மாதிரி இருக்குங்க… உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சினா அது Niagara Falls தாங்க…

நிக்காம ஓடுற ஆற்று தண்ணீர்… வேற வேற இடங்கள் இருந்து.. ஒரே இடத்துல மீட் பண்ணி அது பெரும் அருவியா மாருற பிரம்மாண்ட காட்சிய பாக்குறதுக்காவே செலவு செஞ்சு கனடா வரலாம் போல… ஹ்ம்ம் உலக கவிஞர்கள்ல இருந்து உள்ளூர் கவிஞர்கள் வரை Niagara Falls அ வருனிக்காத வார்த்தைகள் இல்ல… இனி நம்ம என்னத்த வருனிக்குறது..

வாங்க அந்த ஃபால்ஸ்க்கு கீழ போட்டிங் இருக்காம்… அங்க போய் Niagara Falls ஓட நாளு செல்ஃபிய போட்டு அடுத்த ஸ்பாட்டுக்கு கிளம்பலாம்…

ஏய் இங்க பாருங்கய்யா… ஃபால்ஸ்க்கு மேல ஜிஃப் லைன் ரைடுலாம் போறாங்க… இதுல போறது இன்னும் மிரட்டலா இருக்குமே சரி வாங்க அதுலயும் ஒரு ரைடு போயிட்டு வரலாம்…

கனடால நிறைய அழகான விசயங்கள் மலை, காடு, அருவியா இருக்குறதுனால… அந்த மொத்த அழகையும் ஒரே நேரத்துல தரிசனம் பண்ண… சுற்றுலாவாசிகள் ஹெலிக்காப்டர்ர வாடகைக்கு எடுத்து பறந்துகிட்டே சுத்தி பாக்குறாங்களாம்… நம்மளும் விடுவோமா என்ன ? வாங்க ஒரு ரைடு அடிச்சு பாத்துடலாம்…

ஹெலிக்காப்டர் ரைட முடிச்சு அடுத்து நாம போகப்போறது Glacier Skywalk…

நாட்டுக்குள்ள நுளையும் போது… கை, உடம்புலாம் நடுங்குச்சு அதுக்கு காரணம் இங்க இருக்க டெம்ரேச்சர் தான் ஒத்துக்கிறேன்… ஆனா இப்போ என் ரெண்டு காலும் வெட வெடனு நடுங்குதுனா அதுக்கு காரணம்… இந்த Glacier Skywalk தாங்க… கனடால நயகரா ஃபால்ஸ்க்கு அப்புறம் மக்கள் கூட்டம் படையெடுக்கு இடம்னா அது இந்த கண்ணாடி பாலத்துக்கு தான்… உயரமான மலைல வட்டமான கண்ணாடி பாலத்தை அமைச்சு… அதுல மக்கள நடக்க வைக்குறாங்க… இது மாதிரி கண்ணாடி பாலங்கள் நிறைய நாடுகள்ல இருக்கு… பட் இருந்தாலும்… இதுல நடக்கும் போது கீழ பாத்தேன் பாருங்க எனக்கு மரண பீதிய குடுத்துடுச்சு…


சரி வாங்க இந்த பயத்தை போக்க… இதோ இந்த பனி மலைல இருக்க Snowmobile, snowbike, snowcar- னு எல்லாத்துலயும் ஒரு ரைடு போயிட்டு வரலாம்…

ஸ்னோவ் ரைடுலாம் முடிஞ்சதும்… இந்த ஊர் காரர் ஒருத்தர்ரு இதை விட மாஸான ஒரு சர்ப்ரைஸ் ரைடுக்கு உங்கள கூட்டிட்டு போறேன்னு சொல்லி… என் கண்ண கட்டி ஒரு பிளைட்ல ஏத்தி உக்கார வச்சாரு… கொஞ்ச நேரத்துல பிளைட்டு கிளம்பி வானத்துல பறந்துட்டு இருக்கும் போது திடீர்னு ஆ……னு ஒரு அவலக்குரல் அது வேற யாரும் இல்ல நான் தான்… ஏன் அப்டி கத்துனேனா… மேல பறந்துட்டு இருந்த ஏரோ பிளைன்ன அப்டியே கடல்ல இறக்கிட்டு இருந்தாங்க… அதான் அலறிட்டேன்…

பிறகு பிளைட்டு தண்ணிக்குள்ள இறங்குனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது நான் பறந்து வந்தது சாதா பிளைட்டு இல்ல Seaplane flight-னு

அதாவது இந்த பிளைட்டோட ஸ்பெஷல் என்னனா… டேக்கப் ஆகுறதும்… லேண்ட் ஆகுறதும் தண்ணில தானம்… மத்த பிளைட் மாதிரி கீழ சக்கரம் இருக்கும்னு பாத்தா… சக்கரத்துக்கு பதிலா ரெண்டு போட்ட கட்டி விட்டுருக்காங்க… என்ன தான் டூரிஸ்ட்லாம் பெரிய பெரிய பிளைட்ல டிராவல் பண்ணிருந்தாலும்… இந்த Seaplane flight ல டிராவல் பண்றதுக்காகவே சாரையா சாரையா கிளம்பி வராங்க… Seaplane flight மேல பறக்கும் போது ஆல்பைன் ஏரி, மாம்காம் மலை-னு இந்த இடத்தை சுத்தி இருக்க அழகான இடங்களை… இன்னும் அழகா கழுகு பார்வைல நமக்கு சுத்தி காட்டுது…

வாவ்… வாவ்… வாவ்… சும்மா சொல்லக்கூடாதுங்க இதுல ஏறி டிராவல் பண்ணும்போது ஊரோட அழகை தரிசிக்க நமக்கு ரெண்டு கண்ணு பத்தாதுனே சொல்லலாம்…

அடுத்து நாம போகப் போற இடம் Capilano Suspension Bridge Park-ங்குறதுனால கேப்டன் அண்ணா கொஞ்சம் அந்த பிரிட்ஜ் ஓரமா இறக்கி விட்ருங்கனா…


ஒரு ஏரியாக்குள்ள எதாச்சும் ஒரு பிரிட்ஜ்ஜு பேமஸ்ஸா இருக்குனா அது நார்மலான விசயம் தான்… ஆனா ஒரு பிரிட்ஜ்ஜுனால ஒரு ஏரியாவே பேமஸ் ஆகுதுனா அது தான் Capilano Suspension Bridge Park….

இந்த பாலத்துல ஏரி பாக்க எதுக்கு இவளோ பேர் கிளம்பி வராங்கனு பாத்தா… அந்த பாலம் இருக்குற லொக்கேசன் தாங்க..

ரெண்டு உயரமான மலைகளுக்கு நடுவுல… ஆற்று படுகைக்கு மேல… இந்த 460 மீட்டர் தொங்கு பாலத்தை கட்டிருக்காங்க… ஹ்ம்ம் பாலம் கட்டுன மக ராச உனக்கு வேற லெவல் ரசனையா ?

ஆரம்பத்துல பாலத்தை பாக்கும் போது அந்து கிந்து விழுந்துடுமோனு லைட்டா பயந்தேன்… அப்புறம் தைரியத்தை வர வச்சு ஒவ்வொரு ஸ்டெப்பா எடுத்து வைக்கும் போது தான் தெரிஞ்சது… இது தாண்டா சொர்கம்னு… யப்பா என்னா அழகுயா…

பாலத்தோட தரிசனம் முடிச்சுட்டு அடுத்து நாம போகப்போற இடம்… Raptors Ridge….

நம்மளாம் டூர் போகும் போது சாப்பிட்ற நேரத்துல அழையா விருந்தாளியா… குரங்கும், காக்காவும் வர மாதிரி… Raptors Ridge-கு போனா கழுகு, பருந்து, ஆந்தைலாம் வாண்டட்டா நம்ம சாப்பாட்ட பங்கு போட வருவாங்களாம்… அதுனாலயே டூரிஸ்ட் நிறைய பேர் அதுங்களுக்குனு சாப்பாடு வாங்கி ஃபீட் பண்ண… Raptors Ridge வராங்க….

கனடால நெக்ஸ்ட்டு நாம போகப்போற இடம் vancouver harbor….


அட harbor-ல என்னாங்க இருக்க போது கப்பல் இருக்கும் அது கடல்ல கூட்டிட்டு போகும் அவளோ தானனு நெனச்சா அது தான் இல்லை… இங்க வர சுற்றுலாவாகள் சும்மா கப்பல்ல டிராவல் பண்றது மட்டுமில்லாம… அதையும் தாண்டி புனிதமான விசயத்த பாக்க தேடி போறாங்க… அது என்னவா இருக்கும்னு டூரிஸ்ட்டுகளோட சேந்து… நானும் கடலை வெரிக்க வெரிக்க பாத்துகிட்டு இருந்தேன் அப்போ திடீர்னு ஒருத்தன் தண்ணிக்குள்ள இருந்து கிளம்பி வந்தான் பாருங்க…

வேற யாரு திமிங்கலம் தான்… வேடிக்கை பாத்தா மொத்த பேரும் பிரமிச்சு போயிட்டாங்க… ஆனா அது வந்த வேகத்துக்கு நான் பயந்துட்டேங்க… பின்ன என்னாங்க ஒரு முழு கப்பலை கவுத்து போட்ட மாதிரி அம்புட்டு பெருசா இருக்கு…. ஆனா இது வெறும் குட்டி தானாம்… அப்பா அம்மா பெரியப்பா பெரியம்மா திமிங்கலம்லாம் இன்னும் ஆழ் கடல்ல மேஞ்சுகிட்டு இருக்காம்… ஆத்தி குட்டிய தேடி அப்பா அம்மா வந்துட போறாங்க…. அண்ணே கப்பல் ஓட்டுற அண்ணே… தயவு செஞ்சு கப்பல கறைக்கு திருப்புங்கனே… நான் அடுத்த எடத்துக்கு போகனும்…

திமிங்கலத்த பாத்து ரசிச்ச கண்ணோட அடுத்து நாம போகப்போற இடம்… Grouse mountain

4000 அடி உயரம் இருக்க இந்த பிரமாண்ட மலைய தரிசிக்க… பெரும்பாலனவங்க கேபில் கார்ல தான் டிராவல் பண்றாங்க… ஆனா ஒரு சிலர்… டிரெக்கிங் பண்ணி தான் வருவோம்னு அடம் பிடிக்குறாங்க…

நார்மல் டேய்னா கொடி செடினு புடிச்சு ஏறிடலாம்… அதுலயும் விண்டர் சீசன்லலாம் புடிச்சு ஏற மரம் செடி கொடினு ஒன்னும் இருக்காது… பனி பேஞ்சு மொத்த மலைக்கும் வெள்ளை அடிச்ச மாதிரி ஆகிடுமாம்…

எதுக்கு ரிஸ்க்கு நான் கேபில் கார்லயே வந்துகிறேன்.. உங்களுக்கு எது தோது படுதோ அப்டியே வாங்க...

கனடால சுற்றுலா தளங்கள்ல மட்டுமில்லாம… இங்க நடக்க கூடிய திருவிழாக்கள்லயும் நிறைய கொண்டாட்டமான விசயங்கள் இருக்குது சொல்றாங்க…. அதுனால அதையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம் வாங்க….

எப்படா வரும்னு இந்த நாட்டு மக்கள் எதிர் பாத்து கொண்டாடுற திருவிழானா அது Quebec Winter Carnival தாங்க… பனிக்காலத்தை கொண்டாடும் விதமா இந்த திருவிழா அன்னைக்கு… வித விதமான பனி சருக்கு போட்டி, பனி சிற்பம் செதுக்குறது திருவிழாவ ஜில்லுனு ஜில் பண்ணுவாங்க….

அடுத்து நாம பாக்க போற திருவிழா The Calgary Stampede… இந்த திருவிழால ஃபுட், ஷாப்பிங்னு நிறைய விசயங்கள் இருந்தாலும் மக்கள் கூட்டம் கூடுறதே இந்த போட்டிக்கு தாங்க… அதாவது நம்ம ஊர் ஜல்லிகட்டு போட்டில அடங்காத காளைகள அடக்குற மாதிரி… இவங்க ஊர்ல அடங்கா பிடாரி குதிரையில உக்காந்து இப்டி ஒரு வினோத போட்டிய நடத்தி கொண்டாடுறாங்க… அதாவது இந்த கேம்ல என்னதான் குதிரை முரண்டு பிடிச்சு ஆடுனாலும்… மேல உக்காந்திருக்க வீரர் கீழ விழாம இருக்கனுமாம்… இது தான் இந்த திருவிழால இருக்க முக்கியமான ஸ்பெஷல்லே

யப்பா… கண்ணு வேர்க்க வேர்க்க ஏகப்பட்ட எடங்களையும் திருவிழாவையும் சுத்தி பாத்தாச்சு… இப்போ நம்ம மூக்கு வேர்க்குற மாதிரி இந்த நாட்டு உணவுகளை மூக்கு முட்ட சாப்பிடலாம் வாங்க…

நம்ம ஊர்ல எந்த தெரு முக்குக்கு போனாலும் பஜ்ஜி போண்டா கிடைக்குற மாதிரி… கனடால எங்க போனாலும் கிடைக்குற ரெசிபி தான் Poutine…

காரசாரமா சாப்ட்ட நாக்க சாந்தபடுத்த Bannock ட்ரை பண்ணுங்க வேர லெவல்ல இருக்கும்…

அட ட ட டா… அறுசுவையும் நாக்குல நடனமாடுதேனு வடிவேலு சொல்வார்லே… அந்த ஃபீல் கிடைக்கனும்னா Butter tarts சாப்ட்டு பாருங்க கண்டிப்பா கிடைக்கும்…

மாமிச பிரியர்களுக்காக சுட சுட ரெடியாகிட்டு இருக்கு Tourtire…

இனிப்பா… ஜில்லுனு ஜூஸ் குடிச்சுருப்பீங்க… அதையே காரமா குடிச்சுருக்கீங்கனா அது தான் Bloody Caesars..

யம்மா… டூருனாலும் சரி… சோறுனாலும் சரி அதுல… நம்ம கனடாவுக்கு 100க்கு 100 குடுக்கலாம்…

என்னங்க டூர்ர முடிச்சுட்டீங்க அவளோ தானா… நெனைக்காதீங்க…

இவளோ பெரிய நாட்டோட மொத்த அழகையும் அதிசயத்தையும் இந்த 10 நிமிஷத்துலலாம் சொல்ல முடியாதுங்க… இருந்த கொஞ்ச நேரத்துல கனடாவோட சில முக்கிய விசயங்களையே நம்மளால பாக்க முடிஞ்சு… ஆனா பாக்க வேண்டியது இன்னும் பல விசயங்கள் இருக்கு… உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சா நீங்க அந்த எடத்தையெல்லாம் சுத்தி பாத்து என்ஜாய் பண்ணுங்க … சரி நான் ஊருக்கு கிளம்புற நேரம் வந்துடுச்சு டாட்டா பை


Next Story

மேலும் செய்திகள்