சென்னை மாநிலக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி, ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்கத்தினரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், கல்லூரி விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினர். கழிப்பறைகள் கதவுகள் கூட இல்லாமல் இருப்பதாக கூறி, பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பை மாணவ, மாணவிகள் வெளிப்படுத்தினர்.