ராணி மேரி கல்லூரிக்கு திடீர் என்ட்ரி.. தந்த GV பிரகாஷின் அம்மா ரிஹானா.. பாடிய பாடல்..அள்ளிய கிளாப்ஸ்
சென்னை ராணி மேரி அரசு கல்லைக் கல்லூரியின் 110வது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, முன்னாள் மாணவிகளை அழைத்து சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவியும், பின்னணி பாடகியுமான ரிஹானா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 110 மரக்கன்றுகளை மாணவிகள் நட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிஹானா, சாதி மத பேதமின்றி அனைவரும் சமமாக கல்வி பயிலும் சூழலை கல்லூரி உருவாக்கியதாக தெரிவித்தார்.