சென்னையில் ஒரே இடத்தில் 20,000 விநாயகர்... வியக்க வைத்த தனி ஒருவர்!

Update: 2024-09-07 03:15 GMT

சென்னை குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மஹாலில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய கண்காட்சி ஒன்றை சீனிவாசன் நடத்தி வருகிறார். வரும் 17ம் தேதி வரை நடைபெறும், இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் மற்றும், விநாயகர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. 18ம் ஆண்டாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கண்காட்சிக்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்