கொல்கத்தா டாக்டர் போட்டோவை சோசியல் மீடியாவுல யூஸ் பண்ணீங்களா? - உங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி சேதி

Update: 2024-08-22 09:36 GMT

கொடூரமாக கொல்லப்பட்ட மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமான குறிப்புகளையும் உடனடியாக நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இறந்தவரை சித்தரிக்கும் புகைப்படங்கள், வீடியோ கிளிப்புகளையும் சமூக ஊடகங்கள், மின்னணு ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டது. முக்கியமான விஷயங்களை பரப்புவது தொடர்பான கவலைகளை தெரிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் உட்பட இறந்தவர் தொடர்பான அனைத்து குறிப்புகளையும் உடனடியாக நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்