ஆம் ஆத்மி பெண் MP தாக்குதல் விவகாரம்... சாட்டையை சுழட்டிய டெல்லி போலீஸ்
ஆம் ஆத்மி பெண் MP தாக்குதல் விவகாரம்... சாட்டையை சுழட்டிய டெல்லி போலீஸ் | Delhi Police
ஆம் ஆத்மி கட்சி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது...
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், முதல்வர் இல்லத்தில் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் குற்றஞ்சாட்டப்பட்ட பிபவ் குமார் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தரப்பு கூடுதல் வழக்குறிஞர் அதுல் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். எனினும், டெல்லி போலீசார் உண்மைக்கு மாறான தகவல்களை முன் வைத்துள்ளதாக பிபவ் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் மோகன் குற்றஞ்சாட்டினார். இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், பிபவ் குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.