இதுதொடர்பாக, கிரிஷ் பரத்வாஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, அரசியல் லாப நோக்கங்களுக்காக
'இந்தியா' என்ற பெயரை கூட்டணிக்கு வைத்து எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றனர் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வைபவ் சிங் வாதிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஒன்பது எதிர்க்கட்சிகளின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரித்துள்ளது என்றும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லையென்றும் வாதிட்டார். மேலும், மனு தொடர்பாக பதில் அளிக்க மேலும் அவகாசம் வேண்டும் என மத்திய அரசின் சார்பில் கோரிக்கை கொடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், மீதமுள்ள எதிர்க்கட்சிகள் பதில் அளிக்கும் வகையிலும், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும் வகையிலும் அவகாசம் அளித்து விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது