"5 ஆண்டுகளில் 13 கோடி பேர்.. இந்தியாவின் இலக்கு இது தான்"

Update: 2023-08-27 13:40 GMT

பசுமை ஆற்றலில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என்று, ஜி-20 வணிகம் தொடர்பான கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 விண்கலம், நிலவில் தரையிறங்கியது முதல், இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கி விட்டது என்று கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் 13 புள்ளி 5 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். இந்தியா, பசுமை ஆற்றலில் கவனம் செலுத்தி வருகிறது என்றும், பசுமை ஹைட்ரஜன் துறையில் சூரிய ஆற்றலின் வெற்றியைப் பிரதிபலிக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்