இரட்டை கோபுரம் தாக்குதல் போல்... உக்ரைன் அடித்த அடி... கதிகலங்கிய ரஷ்யா... கொதிப்பில் புதின்
ரஷ்யாவின் காசன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... 50 நிமிட இடைவெளியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன... கட்டடங்கள் தீப்பிடித்து எரியத் துவங்கிய நிலையில் உடனடியாக உள்ளே இருந்த குடியிருப்புவாசிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்... அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.