அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார். அவருக்கு வயது100. ஜார்ஜியாவின் ப்ளைன்சில் உள்ள வீட்டில், ஜிம்மி கார்ட்டரின் உயிர் பிரிந்தது.
- ஜனநாயக கட்சி சார்பில் 39வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர், 1977 முதல் 1981ம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையிலும் சிறப்பாக பணியாற்றினார்.
- கேம்ப் டேவிட் உடன்படிக்கையின் படி, இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததில், கார்ட்டரின் பங்கு முக்கியமானது.
- அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் அதிக வயது வரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரிய ஜிம்மி கார்ட்டர், கடந்த அக்டோபர் மாதம் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின், மனிதாபிமான பணிகளுக்காக அவருக்கு 2002ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜிம்மி கார்ட்டருக்கு 4 பிள்ளைகள், 11 பேரக் குழந்தைகள், 14 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
- மனைவி ரோசலின் கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் மரணமடைந்தார். ஜிம்மி கார்ட்டரின் மறைவையொட்டி, துக்கம் அனுசரிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது