இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் திடீர் அனுமதி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறுவை சிகிச்சைக்காக ஜெருசலேம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக குழாயில் நோய் தொற்று காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்புடன் நெதன்யாகு காரில் மருத்துவமனைக்கு சென்றார். அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.