செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 211 ரன்களும் தென் ஆப்பிரிக்கா 301 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன பாகிஸ்தான் 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா, முகமது அப்பாஸ் பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 40 ரன்களில் ஆட்டமிழக்க 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா திணறியது. இதன்பின்னர் 9வது விக்கெட்டுக்கு ரபாடா-யான்சென் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. சிறப்பாக விளையாடிய ரபாடா அவ்வப்போது பவுண்டரி அடித்தார். இதனால் 40வது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிய தென் ஆப்பிரிக்கா,, 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக முன்னேறியது.
--